அக்.27,10,2014. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து
உரையாடினார் உகாண்டா நாட்டு அரசுத் தலைவர் யொவெரி ககுதா முசேவேனி. திருத்தந்தையுடனான
சந்திப்புக்குப்பின் திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின், நாடுகளுடனான திருப்பீடச்
செயலகத்தின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள்
குறித்துப் பேசினார் அரசுத்தலைவர் முசேவேனி. திருப்பீடத்திற்கும் உகாண்டா நாட்டிற்கும்
இடையே நிலவி வரும் நல்லுறவு, கல்வி மற்றும் நலத்துறைகளில் உகாண்டா திருஅவை ஆற்றிவரும்
பணிகள், பல்வேறு மதங்களிடையே, இனங்களிடையே இருக்கவேண்டிய இணக்க வாழ்வு போன்றவை குறித்து
இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகம் கூறியது. சர்வதேச
விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக ஆப்ரிக்காவின் மோதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.