2014-10-27 16:02:59

எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது


அக்.27,10,2014. எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும், எபோலாவால் இதுவரையில் மொத்தம் 4922 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக நலவாழ்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளில் பத்தைத் தவிர மற்றவை அனைத்தும் எபோலாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள சியரா லியோன், லைபீரியா, கினி ஆகிய மூன்று நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
இந்த மூன்று நாடுகளுக்கு வெளியில் எபோலா வந்ததாக உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 27தான் ஆகும். எபோலாவாவல் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்துள்ள நாடுகளின் வரிசையில் தற்போது மாலியும் சேர்ந்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏழு பேருக்கு எபோலா வந்திருந்தாலும், அவர்கள் அனைவருமே நோயிலிருந்து மீண்டுவிட்டார்கள் என்பதால், முறையான மருத்துவ மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக எபோலாவை வெல்ல முடியும் என அரசுத்தலைவர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.