2014-10-25 15:50:32

ஹாங்காங் சனநாயக ஆதரவு கர்தினால் Zen அவர்களுக்கு திருத்தந்தை ஊக்கம்


அக்.25,2014. ஹாங்காங்கில் சனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்களுக்கு ஆதரவளித்துவரும் அந்நாட்டு கர்தினால் Joseph Zen Ze-kiun அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்கமளித்துள்ளார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குப் பின்னர் தன்னைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பார்த்தவுடனேயே, இதோ ‘கவுணுடன்’ போராடும் ஒருவர் என்று சொல்லி வாழ்த்தியதாக, கர்தினால் Zen அவர்கள், தனது சீன மொழி blogல் எழுதியுள்ளார்.
ஹாங்காங் போர்க்களத்திலிருந்து தான் வந்துள்ளேன் என்று, தன்னை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே திருத்தந்தை சிரித்துக்கொண்டே இவ்வாறு கூறியதாகவும், மாவீரன் கோலியாத்தை, சிறுவன் தாவீது கவுணால் வீழ்த்தியதை திருத்தந்தை நினைவுபடுத்தினார் எனவும் கர்தினால் எழுதியுள்ளார்.
ஹாங்காங்கில் ஏறக்குறைய ஒரு மாதமாக நடந்துவரும் சனநாயக ஆதரவுப் போராட்டங்களில் கர்தினால் Zen அவர்களும் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு அவற்றுக்கு ஆதரவளித்து வருகிறார். கர்தினால் Zen அவர்களின் வயது 83.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.