2014-10-17 15:50:31

விடுதலைப்புலிகள், பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு இரத்து


அக்.17,2014. ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது ஐரோப்பிய நீதிமன்றம்.
லக்சம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வியாழனன்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்ததில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011ம் ஆண்டில் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.

ஆதாரம் : தமிழ்வின்








All the contents on this site are copyrighted ©.