2014-10-09 16:43:10

எபோலோ நோயால் ஆப்ரிக்கப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி


அக்.09,2014. எபோலா நோய் உடனடியாகக் கட்டுப்படுத்தப்படவில்லையெனில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆப்ரிக்கக் கண்டத்திற்கு 3,200 கோடி டாலர் பொருளாதார இழப்பீடு ஏற்படும் என எச்சரித்துள்ளது உலக வங்கி.
கினி, லைபெரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளிலும் அதை ஒட்டிய மேற்கு ஆப்ரிக்க அண்டை நாடுகளிலும் பரவி வரும் இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டும் என விண்ணப்பிக்கும் உலக வங்கி, இதனால் ஆப்ரிக்கப் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கவலையை வெளியிடுகிறது.
மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய்க்கு இதுவரை 3,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளுக்கு உலக வங்கி 40 கோடி டாலர் உதவியை வழங்கியுள்ளது.

ஆதாரம் : Misna








All the contents on this site are copyrighted ©.