2014-10-08 16:39:28

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிக் கட்டுமானம் துவக்கம்


அக்.08,2014. இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியைக் கூட்டாக நிறுவும் பணிகளை ஹவாய்த் தீவில் இச்செவ்வாயன்று தொடங்கின.
ஹவாய்த் தீவில் இருக்கும் புகழ்பெற்ற Mauna Kea எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கிதான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.
500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தை மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கியின் திறன் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட தொலைநோக்கியானது, வானியல் அறிவியலின் புரிதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் என்று நம்பப்படுகிறது.
இந்த தொலைநோக்கியின் கட்டுமானம் 2022ம் ஆண்டு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : பிபிசி








All the contents on this site are copyrighted ©.