2014-10-06 16:44:03

பாம்பு தீண்டி இந்தியாவிலேயே அதிக இறப்புகள்


அக்.06,2014. உலகம் முழுவதும் ஆண்டுக்கு இருபது இலட்சம் பேர் பாம்பு தீண்டி பாதிக்கப்படுகின்றனர் எனவும், அதில், ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் உலக வன உயிரின வார விழாவில் தெரிவிக்கப்பட்டது.
உலகில் 3,000 வகை பாம்பு இனங்கள் உள்ள நிலையில், இந்தியாவில் 270 வகை பாம்புகள் உள்ளதாகவும், இதில் 4 வகை பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ளவை எனவும் கூறிய கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், சராசரியாக பாம்புகள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வாழும் எனவும் தெரிவித்தார்.
பாம்பு தீண்டி உயிரிழப்பு நேரிடுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்புகள் அவற்றின் தோலுக்காகவும், நஞ்சுக்காகவும் கொல்லப்படுகின்றன. பாம்புகளின் நஞ்சைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய், இதய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆதாரம் : The Hindu







All the contents on this site are copyrighted ©.