2014-10-04 16:50:03

மொலூக்காஸ் தீவில் புனித பிரான்சிஸ் சேவியர் நினைவுச்சின்னம்


அக்.04,2014. இந்தோனேசியாவின் மொலூக்காஸ் தீவுகளில் 469 ஆண்டுகளுக்கு முன்னர் புனித பிரான்சிஸ் சேவியர் சென்றதைச் சிறப்பிக்கும் விதமாக, ஆம்போனியா மறைமாவட்டம் நினைவுச்சின்னம் ஒன்றை அமைத்துள்ளது.
மொலூக்காஸ் தீவுகளில் நற்செய்தி அறிவிப்பதற்காக, 1546ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் இயேசு சபை மறைப்பணியாளர் புனித பிரான்சிஸ் சேவியர், ஆம்போன் தீவுக்குச் சென்றதன் நினைவாக, ஆறு மீட்டர் உயரமுள்ள அப்புனிதரின் திருவுருவம் திறக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் தேதியன்று இத்திருவுருவத்தைத் திறந்து வைத்துப் பேசிய திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Guido Filipazzi அவர்கள், இந்நாள் இந்தோனேசியாவுக்கு முக்கியமான நாள், இதே அக்டோபர் முதல் தேதிதான் இந்தோனேசியாவில் பஞ்சசீலக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறினார்.
இந்நிகழ்வில் ஆம்போன் மேயர், அப்பகுதியின் பழங்குடியினத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.