2014-10-04 16:50:11

sat nav அமைப்பினால் மனிதகுலம் அடையும் பலன்கள்


அக்.04,2014. மின்னணுக் கருவிகள் பயன்பாட்டிற்கு உதவும் sat nav என்ற துணைக்கோள்கள் அமைப்பின் நன்மைகள் மற்றும் அவற்றால் மனிதகுலம் அடையும் பலன்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
விண்வெளி அறிவியலும், தொழில்நுட்பமும் மனித சமுதாயத்துக்கு ஆற்றிவரும் நன்மைகளைக் கொண்டாடுவதற்கென அறிவிக்கப்பட்டுள்ள உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, UNOOSA என்ற ஐ.நா. விண்வெளி நிறுவனத்தின் இயக்குனர் Simonetta Di Pippo வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைக்கோள்களால் மனிதகுலம் அடையும் பலன்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 வரை கடைப்பிடிக்கப்படும் உலக விண்வெளி வாரம், 1999ம் ஆண்டில் ஐ.நா. பொது அவையால் அறிவிக்கப்பட்டது. 1957ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி Sputnik I என்ற செயற்கை துணைக்கோள் ஏவப்பட்டதன் நினைவாக இவ்வாரம் உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
விண்வெளி ஆய்வு மற்றும் அதனை நாடுகள் பயன்படுத்துவது குறித்த உலக ஒப்பந்தம் 1967ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அமலுக்கு வந்தது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.