2014-10-01 16:16:50

இந்தியாவில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு ஆர்வலர்கள் அழைப்பு


அக்.01,2014. இந்தியாவிலும், உலக அளவிலும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளை நிறுத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு, மனித உரிமைகள் மற்றும் நொபெல் அமைதி விருது பெண் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Breakthrough என்ற அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு இந்திய மாநிலங்களில் 91 விழுக்காட்டுப் பெண்களும் சிறுமிகளும் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்செயலுக்கு உள்ளாகியுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
நொபெல் அமைதி விருது பெண் ஆர்வலர்கள் Jody Williams, Shirin Ebadi ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையை முன்னிட்டு, Breakthrough அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் இந்திய அரசுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் கணிப்புப்படி, இந்தியாவில் தினமும் 92 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் எனத் தெரிகிறது.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.