2014-09-26 16:13:49

மரணதண்டனைக்கு 21ம் நூற்றாண்டில் இடமில்லை, ஐ.நா.


செப்.26,2014. மரணதண்டனையைத் தொடர்ந்து நிறைவேற்றும் பழக்கம் நாகரீகமற்ற காலத்துக்குரியது என்று சொல்லி, 21ம் நூற்றாண்டில் இப்பழக்கத்திற்கு இடமில்லை என்று அறிவித்துள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.
“மரணதண்டனையிலிருந்து விலகியிருத்தல் : தேசிய அளவிலான தலைமைத்துவம்” என்ற தலைப்பில் ஐ.நா பொது அவையில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய, ஐ.நா. உதவிப் பொதுச் செயலர் யான் எலியாசன் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
மரணதண்டனை நிறைவேற்றும் பழக்கத்தை முழுவதுமாக அகற்றுவதற்கு நாடுகளின் தலைவர்கள் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊக்கப்படுத்திய அவர், மரணதண்டனையை அகற்றும் முயற்சியில் உலக அளவில் முன்னேற்றம் காணப்படுகின்றது என்றும் கூறினார்.
ஏற்கனவே மரணதண்டனையைத் தடைசெய்துள்ள 160க்கும் மேற்பட்ட நாடுகளுடன், எல் சால்வதோர், காபோன், போலந்து ஆகிய நாடுகளும் இணைவதற்கு கடந்த ஏப்ரலில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் எலியாசன்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.