2014-09-26 16:14:09

எபோலா ஒழிப்புக்கு இந்தியா ஒரு கோடி டாலர் நிதியுதவி


செப்.26,2014. அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக எழும்பியுள்ள எபோலா நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு உலகத் தலைவர்களால் இயலும் மற்றும் உலகத் தலைவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
எபோலா நோய் குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இவ்வாறு பேசிய பான் கி மூன், இந்நோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள கினி, சியெரா லியோன், லைபீரிய ஆகிய நாடுகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கவும் இக்கூட்டம் நடப்பதாகவும் கூறினார்.
மேலும், எபோலா நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு, தனது பங்களிப்பாக, ஒரு கோடி டாலரை ஐ.நா.வில் வழங்கவுள்ளது இந்தியா.
எபோலா பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் சாதனங்கள் வாங்குவதற்கென மேலும் 20 இலட்சம் டாலரை இந்தியா வழங்கவுள்ளது.
இம்மாதம் 12ம் தேதி, உலக நலவாழ்வு நிறுவனத்திடம் 5 இலட்சம் டாலரை இந்தியா வழங்கியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN/ The Hindu







All the contents on this site are copyrighted ©.