புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது அல்பேனியத் திருப்பயணம்
செப்.22,2014. பல்வேறு மதநம்பிக்கையாளர்களைக் கொண்ட அல்பேனியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் திருப்பயணம், அந்நாட்டு மக்களின் நம்பிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது என்றார்
கத்தோலிக்க அதிகாரி ஒருவர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அல்பேனிய முயற்சியில்
கத்தோலிக்கர்களும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் முழுமூச்சாக ஈடுபட்டுவரும்
வேளையில் திருத்தந்தையின் திருப்பயணம் அதற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது என்றார் திரானா
கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் துணை அதிபர் Tritan Shehu. 1993ம் ஆண்டு இடம்பெற்ற திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் அவர்களின் அல்பேனியத் திருப்பயணத்திற்குப்பின், நாட்டில் பல்வேறு
நல்ல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதே பாதையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
திருப்பயணத்தின் நல்விளைவுகளுக்காக அல்பேனியாவின் அனைத்து மத மக்களும் நம்பிக்கையுடன்
காத்திருப்பதாகவும் கூறினார் Shehu.