2014-09-22 16:46:41

சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பேரணிகள்


செப்.22,2014. உலகில் சுற்றுச்சூழல் காக்கப்படுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பல இலட்சக்கணக்கான மக்கள் உலகின் 161 நாடுகளில் இஞ்ஞாயிறன்று 2700 நிகழ்வுகளை நடத்தினர்.
இவ்வாரம் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க்கில் 120 உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள, வெப்பநிலை மாற்றம் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டிற்கு முன்னோடியாக உலகம் முழுவதும் முக்கிய நகர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆதரவுப் பேரணிகள் இடம்பெற்றன.
இலண்டனில் 40 ஆயிரம் பேர் பேரணியில் கலந்துகொண்டனர். இது தொடர்புடைய நிகழ்வுகளில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கலந்துகொண்டார்.
நியூயார்க் நகரில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வுகளில் ஐ.நா. பொதுச்செயலரும், பல நடிகர்களும், கிறிஸ்தவ அமைப்புகளும் கலந்து கொண்டன.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.