2014-09-19 15:46:40

வெப்பநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிகள்


செப்.19,2014. வெப்பநிலை மாற்றம் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில், வருகிற செவ்வாயன்று, நியுயார்க்கில் 120 உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளவேளை, இம்மாநாட்டில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நகரங்களில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வருகிற ஞாயிறன்று நியூயார்க், இலண்டன் உட்பட பல இடங்களில் இப்பேரணிகள் நடைபெறவுள்ளன. மேலும், உலக அளவில் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இப்பேரணிகளுக்கு ஆதரவாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் நடக்கும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், உலக வெப்பநிலையை 2 டிகிரி செல்சியுசுக்குள் வைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாடும் தெளிவான திட்டங்களை வகுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, அனைத்துலக எரிசக்தி நிறுவனத்தின் கணிப்புப்படி, 2050ம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலையை 2 டிகிரி செல்சியுசுக்குக் கொண்டுவருவதற்கு ஆண்டுக்கு நூறாயிரம் கோடி டாலரை உலகு முதலீடு செய்ய வேண்டும்.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.