2014-09-17 16:32:54

சர்க்கரையின் அளவைப் சரிபாதியாகக் குறைக்கப் பரிந்துரை


செப்.17,2014. நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள மருத்துவர்கள், இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.
உலக நலவாழ்வு நிறுவனமும், பிரிட்டனின் நலவாழ்வு நிபுணர்களும் அண்மையில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைச் சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 விழுக்காடுவரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பற்களில் ஏற்படும் சிதைவுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையே முக்கிய காரணியாக இருப்பதாக சுட்டிக்காட்டும் இலண்டன் ஆய்வாளர்கள், நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் குறைத்தால் மட்டுமே பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பலவகையான நோய்கள் குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.