2014-09-17 16:32:47

ஓசோன் வாயுப்படலம் அடுத்த சில பத்தாண்டுகளில் சீராகும், ஐ.நா.


செப்.17,2014. ஓசோன் வாயுப்படலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் குறைப்பதில் காணப்படும் முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ள அதேவேளை, அடுத்த சில பத்தாண்டுகளில் ஓசோன் வாயுப்படலம் தனது நலமான நிலையை அடையும் என ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 16, இச்செவ்வாயன்று, அனைத்துலக ஓசோன் வாயுமண்டலப் பாதுகாப்பது தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், ஓசோன் வாயுப்படலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் குறைப்பதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கின, அதன் பயனை இன்று காண முடிகின்றது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஓசோன் வாயுமண்டலப் பாதிப்பால் தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன, என காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடந்த ஓசோன் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.