2014-09-15 16:16:20

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து வரவேண்டும், CAFOD அழைப்பு


செப்.15,2014. இன்றைய காலநிலை மாற்றங்களால் அதிக அளவில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே என்பதை மனதில்கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது CAFOD என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.
இன்றைய உலகில் இடம்பெறும் வறட்சியும், பெருமழையும், சுற்றுச்சூழலையும் கடந்த காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நாம் பெற்றுள்ள முன்னேற்றங்களையும் பெருமளவில் பாதிப்பவைகளாக உள்ளன எனவும் எடுத்துரைத்த CAFOD பிறரன்பு அமைப்பு, ஆபத்தான வாயுக்களை வெளியிடும் தொழில்முறையை கைவிட்டுவிட்டு இயற்கைக்கு ஆபத்து விளைவிக்காத தொழில்நுட்பங்கள் கையாளப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஏழ்மை ஒழிப்புத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் அனைத்து மதத்தினரும் நினைவில்கொண்டு அதற்கியைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளது CAFOD என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.