2014-09-12 16:30:32

ஓசோன் படலத்தில் துளைகள் குறைந்துள்ளன, ஐ.நா.ஆய்வு


செப்.12,2014. ஓசோன் வாயுப் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரங்கள் உலக நாடுகளின் முயற்சியால் குறைந்து வருகின்றபோதிலும், வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வளிமண்டலம் காக்கப்படுவதற்கு தொடர்ந்து உழைக்கவும் நாடுகளை விண்ணப்பித்துள்ளது ஐ.நா. நிறுவனம்.
ஓசோன் வாயு மண்டலம் குறித்து 300 அறிவியலாளர்கள் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளின் தீவிர முயற்சியினால் ஓசோன் வாயுப் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரங்கள் குறைந்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
அண்டார்டிகா பகுதியின் மேற்பரப்பில் இந்த ஓசோன் வாயுப் படலத் துவாரங்கள் மிகவும் பெரியதாகக் காணப்பட்டன.
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (World Meteorological Organization) மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆய்வாளர்களால் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16, ஓசோன் வாயுப் படலத்தைக் காக்கும் அனைத்துலக தினம்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.