2014-09-11 16:43:02

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் குறித்து இந்திய ஆயர் பேரவைத் தலைவர் ஆழ்ந்த கவலை


செப்.11,2014. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள உயிர்பலிகள் குறித்தும், பொருள்சேதம் குறித்தும் இப்புதனன்று தன் கவலையை வெளியிட்ட கர்தினால் கிளீமிஸ் அவர்கள், அப்பகுதி மக்களுக்கு உதவிசெய்யும்படி இந்தியக் கத்தோலிக்கருக்குச் சிறப்பான விண்ணப்பத்தையும் விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உருவாகியுள்ள பத்தடி உயர வெள்ளத்தில் 600 கிராமங்களுக்குமேல் மூழ்கியுள்ளதாகவும், இதனால் ஆறு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கத்தோலிக்கர்கள் திரட்டும் நிதி மற்றும் பொருள் உதவிகளை இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் வழியே அம்மக்களுக்கு உதவும்படி கர்தினால் கிளீமிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.