2014-09-09 16:22:46

கண் தான விழிப்புணர்வுக்காக இரத்த தானம் செய்த பார்வையற்றோர்


செப்.09,2014. தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு, கண் தானத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக பார்வையற்றோர் பலர் திருச்சியில் சிறப்பு ரத்த தான முகாம் ஒன்றை நடத்தினர்.
விபத்தில் பார்வையை இழந்த நபர்களுக்கு தானமாகப் பெறப்படும் கண்கள் மூலம் பார்வை கிடைக்கும். ஆகவே, இறப்புக்குப் பிறகு தீயில் அல்லது மண்ணில் அழிந்து போகும் கண்களைத் தானமாக வழங்கி பார்வை இழந்தவர்கள் பலரை மீண்டும் இந்த உலகைக் காண வழி ஏற்படுத்துங்கள் என்கிற கோரிக்கையுடன் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அங்கு குழுமியிருந்தனர்.
திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, “பார்வை உள்ளவர்கள் வாழ்நாள் முடிந்த பிறகு கண் தானம் செய்ய வேண்டும் என்பதற்காக, பார்வையற்றவர்கள் பலர் தங்களது ரத்தத்தைக் கொடுத்து வேண்டுகோள் விடுப்பது நெகிழச் செய்கிறது என்று கூறினார்.
செப்டம்பர் 8 இந்திய தேசிய கண் தான தினம்.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.