2014-09-06 16:00:42

ஐ.நா.வின் சுனாமிப் பேரலை பரிசோதனைப் பயிற்சிகள்


செப்.06,2014. சுனாமி பேரலை ஏற்படும் காலத்தில் நாடுகள் உடனடியாகச் செயல்படுவதற்கு உதவியாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வருகிற வாரத்தில் இரு பரிசோதனைப் பயிற்சிகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இம்மாதம் 9,10 தேதிகளில் நடத்தவுள்ள முதல் பரிசோதனைப் பயிற்சி, இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் 9.1 ரிக்டர் அளவு நில அதிர்ச்சியைத் தூண்டும், இரண்டாவது பயிற்சி, ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்குத் தெற்கேயுள்ள Makran பள்ளத்தாக்கில் 9.0 ரிக்டர் அளவு நில அதிர்ச்சியைத் தூண்டும் என ஐ.நா. அறிவித்துள்ளது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட 24 நாடுகள் இப்பயிற்சியில் பங்கெடுக்கும் எனவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர், மியான்மார், பங்களாதேஷ், மலேசியா, மாலத்தீவுகள், ஓமன், ஏமன் என 24 நாடுகள் இப்பயிற்சியில் பங்கெடுக்கவுள்ளன.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.