2014-08-30 16:54:15

திருத்தந்தை : துன்புறும் ஈராக் அகதிகளின் துயர் துடைப்புப் பணியாற்ற எப்போதும் தயார்


ஆக.30,2014. ஈராக்கில் புலம்பெயர்ந்தோர் முகாமில் பணியாற்றும் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருடன் திருத்தந்தை தொடர்புகொண்டு பேசினார் என்ற செய்தி உண்மையானதே என்பதை உறுதிச் செய்துள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்புத் துறையின் துணைத்தலைவர்.
ஈராக் அகதிகளிடையேப் பணியாற்றும் அருள்பணி Behnam Benoka என்பவர், தன் நண்பரும் பத்திரிகையாளருமான Alan Holdren என்பவர் மூலமாக ஈராக் நிலை குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், தென்கொரிய திருப்பயணத்திலிருந்து விமானத்தில் திரும்பியபோது விவரங்களை வழங்கியதாகவும், வத்திக்கான் திரும்பியவுடன் அந்த அருள்பணியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு திருத்தந்தை உரையாடியதாகவும் திருப்பீட அதிகாரி அருள்பணி Ciro Benedettini கூறினார்.
ஈராக் அகதிகளிடையேப் பணியாற்றும் சுயவிருப்பப் பணியாளர்களுக்கு நன்றியை, தன் உரையாடலின்போது வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் மக்களின் துயர்களை அகற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் எப்போதும் மேற்கொள்வதாக அருள்பணி Benoka அவர்களிடம் உறுதியளித்ததாகவும் கூறினார் அருள்பணி Benedettini.
தொலைபேசி உரையாடல் குறித்த விவரங்களை திருத்தந்தையின் செயலர் மூலமாக அறிய வந்ததாகவும் கூறினார் திருப்பீடச் செய்தித் தொடர்புத்துறையின் துணைத்தலைவர் Benedettini.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.