2014-08-26 15:51:23

பசிக் கொடுமைகளும், அச்சமும் Ebola நோய் பகுதிகளில் அதிகம் பரவியுள்ளது


ஆக.26,2014. லைபீரியா மற்றும் Sierra Leone நாடுகளில் Ebola நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் விதிக்கப்பட்டுள்ள புதியத் தடைகளால், பசிக் கொடுமைகளும், அச்சமும் அதிக அளவில் பரவியுள்ளதாக திருஅவைப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
லைபீரியாவின் தலைநகரில் உணவு விநியோகத்தை மேற்கொள்ள திருஅவைக் குழுக்கள் தயாராக இருந்தாலும், அரசின் கட்டுப்பாடுகளினால் அது இயலாததாக உள்ளது என்று சலேசியத் துறவு சபையின் மேற்கு ஆப்ரிக்க பகுதியின் தலைவர், அருள் பணியாளர் Jorge Grisafulli அவர்கள் கூறினார்.
மொன்ரோவியாவின் அண்மைப்பகுதிகள் அரசின் அவசரகால நிலை அறிவிப்பைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
WHO எனப்படும் உலக நலவாழு நிறுவனத்தின் கூற்றுப்படி, கடந்த மார்ச் மாதத்திலிருந்து மேற்கு ஆப்ரிக்காவில் 2,600க்கும் மேற்பட்டோர் Ebola நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.