2014-08-26 15:44:29

ஈராக்கில் நிகழும் வன்முறைகள், இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான மோதல் அல்ல - கர்தினால் பரோலின்


ஆக.26,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்களும், Yezidi மக்களும் தீவிரவாதிகளால் சித்திரவதைப் படுத்தப்படுவதை, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான மோதல் என்று எளிதாகப் புறந்தள்ள முடியாது என்று தெரிவித்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்.
ஈராக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத்தாக்குதல்களை, அந்நாட்டின் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் மேற்கொள்வதில்லை என்பது உண்மை என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இஸ்லாமியரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், பெரும்பான்மையான கிறிஸ்தவர்களும் ஈராக்கில் வாழவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சிரியாவிலுள்ள திருப்பீடப் பிரதிநிதி தனக்கு அனுப்பியுள்ள தகவல்களிலிருந்து இதனைத் தெரிந்துகொண்டதாகக் கூறினார் திருப்பீடச் செயலர்.
ஈராக்கில் தற்போது எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்கும் திறன் அந்நாட்டிற்கு இல்லாத நிலையில், அங்கு அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமாகிறது என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : CWN








All the contents on this site are copyrighted ©.