2014-08-25 16:14:01

இந்தியப் பெருங்கடலைக் கடந்தபோது இவ்வாண்டில் 20,000 பேருக்கு மேல் பலி, ஐ.நா


ஆக.25,2014. இவ்வாண்டின் முதல் பாதிப் பகுதியில் இந்தியப் பெருங்கடலைக் கடந்தபோது 20,000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர், இவர்களில் அதிகமானோர் மியான்மாரிலிருந்து வெளியேறிய ரோஹின்யா இனத்தவர் என்று, ஐ.நா. அகதிகள் நிறுவனம் (UNHCR) வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
வங்களா வளைகுடாவிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் தென் கிழக்கு ஆசியா வழியாக ஆஸ்திரேலியா செல்லும் கடல்பயணத்தில் மக்கள் பல உரிமை மீறல்களையும் எதிர்நோக்குகின்றனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
இவ்வாறு கடல்பயணம் செய்தவர்களில் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட அகதிகளில் ஐந்தாயிரத்துக்கு அதிகமானோர் ஆஸ்திரேலியா, Nauru அல்லது Papua New Guinea தடுப்பு முகாம்களிலும், மற்றும் பலர் தென் கிழக்கு ஆசியப் பகுதியின் தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
இம்மக்கள் மறைந்து மறைந்து செல்வதால் இவர்கள் பற்றிய முழு விபரங்கள் தெரியிவில்லை எனக் கூறும் அவ்வறிக்கை, கடந்த ஜூன் முடிய முந்திய 12 மாதங்களில் வங்களா வளைகுடாவிலிருந்து 53 ஆயிரம் மக்கள் கடல்பயணத்தைத் தொடங்கியுள்ளனர் எனக் கூறியுள்ளது.
2012ம் ஆண்டு ஜூன் மாதம், மியான்மாரின் Rakhine மாநிலத்தில் பிரச்சனைகள் தொடங்கியதிலிருந்து ஏறக்குறைய 87 ஆயிரம் பேர் இந்த ஆபத்தான கடல்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.