2014-08-23 15:30:43

மேற்கு ஆப்ரிக்காவில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் துன்புறுவதற்கு சமுதாயம் அனுமதிக்கக் கூடாது, ஐ.நா.


ஆக.23,2014. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோயால் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் துன்புறுவதற்கு மனித சமுதாயம் அனுமதிக்கக் கூடாது என்று, இந்நோய் பராமரிப்புக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் கூறினார்.
எபோலா உயிர்க்கொல்லி நோய் பரவியுள்ள நாடுகளுக்கானப் பயணத்தைத் தொடங்கியுள்ள மருத்துவர் David Nabarro அவர்கள், லைபீரியாவில் இவ்வெள்ளியன்று இவ்வாறு கூறினார்.
லைபீரியாவில் இரு மருத்துவர்களும், ஒரு தாதியும் ZMapp என்ற எபோலா நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு மருத்துவரின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற செப்டம்பர் 4,5 தேதிகளில் ஜெனீவாவில் இந்நோய் குறித்த ஆய்வுக் கருத்தரங்கு ஒன்றையும் உலக நலவாழ்வு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 20 வல்லுனர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.
கினி, லைபீரியா, நைஜீரியா, சியெரா லியோன் ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயால் 2,473 பேர் இறந்துள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.