2014-08-21 17:23:09

காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு வரும் ஆபத்து


ஆக.21,2014. காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் அந்த நாட்டின் உற்பத்தியில் 6 விழுக்காட்டுப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்றவைகளையே நம்பியிருப்பதால், கடுமையான காற்று, வறட்சி, பெருமழை போன்றவைகளால் உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி.
வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய 6 நாடுகளின் பொருளாதாரம் இதனால் 2050ல் 2 விழுக்காடு பாதிக்கப்பட்டு, 2100ல் அது 9 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதியில் இலங்கையின் வெப்பநிலை 3 விழுக்காடு அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.