2014-08-21 17:20:35

எபோலா நோயின் தாக்கம் அதிகமாக இருப்பினும் சியேரா லியோன் நாட்டிலேயே தங்க வெளிநாட்டு கத்தோலிக்கத் துறவிகள் முடிவு


ஆக.21,2014. எபோலா நோயின் தாக்கம் அதிகமாக இருப்பினும் சியேரா லியோன் நாட்டிலேயே தங்கியிருந்து தங்கள் பணிகளைத் தொடர உள்ளதாக 6 வெளிநாட்டு கத்தோலிக்கத் துறவிகள் அறிவித்துள்ளனர்.
Makeni மறைமாவட்டத்தில் பணிபுரியும் Augustinian Recollect சபையின் நான்கு பிலிப்பீன்ஸ் துறவிகளும் இரண்டு இஸ்பானியத் துறவிகளும் இணைந்து இதனை அறிவித்துள்ளனர்.
இந்த துறவிகள் விரும்பினால் நாட்டைவிட்டு வெளியேறலாம் என தலத்திருஅவை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளபோதிலும், மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து அவர்களுடனேயே தங்கியிருந்து பணிபுரிய உள்ளதாக இத்துறவிகள் அறிவித்துள்ளனர்.
WHO எனும் உலக நலவாழ்வு அமைப்பின் அறிக்கையின்படி, Guinea, Liberia, Nigeria, Sierra Leone ஆகிய நாடுகளில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட 2127 பேரில் 1145 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆதாரம் : NCR








All the contents on this site are copyrighted ©.