2014-08-21 17:15:38

ஈராக்கில் தாக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக அனைத்துலக சமூகம் தலையிட பாகிஸ்தான் கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பம்


ஆக.21,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட அனைத்துலக சமூகம் தலையிட்டு உறுதி வழங்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் பாகிஸ்தான் கிறிஸ்தவத் தலைவர்கள்.
பாகிஸ்தானின் கிறிஸ்தவத் தலைவர்கள் லாகூரில் ஒன்றுகூடி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலாம் நூற்றாண்டிலிருந்தே ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் அங்கேயே தொடர்ந்து வாழ உறுதியளிக்கப்படவேண்டும் என அனைத்துலக சமுதாயத்தை விண்ணப்பித்துள்ளனர்.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு பாகிஸ்தான் அரசு தன் கண்டனத்தை வெளியிடவேண்டும் எனவும், இங்கு கூடிய பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதனும் தன் மத நம்பிக்கைக்கு இயைந்தவகையில் வாழ்வதற்கான உரிமைகள் மதிக்கப்படுவதை அனைத்துலக் சமூகம் உறுதிசெய்யவேண்டும் எனவும் கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.