2014-08-21 17:13:45

ஈராக் சென்றுள்ளனர் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் திருஅவை பிரதிநிதிகள் குழு


ஆக.21,2014. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ள ஏறத்தாழ ஒரு இலட்சம் ஈராக் கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை சமூகத்தினரையும் சந்திக்கும் நோக்கில் ஈராக் சென்றுள்ளனர் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் திருஅவை பிரதிநிதிகள் குழு.
ஈராக் மற்றும் சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவர்களைச் சென்று சந்தித்து உதவ ஏற்கனவே அப்பகுதி திருஅவைத் தந்தையர்கள் எடுத்த முடிவின்படி, இப்பயணம் இவ்வாரம் புதனன்று இடம்பெற்றதாக அறிவித்தார் மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Rai
கர்தினால் ராயுடன் மெல்கிதே கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் கிறகரி லஹாம், சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை இக்னேஷ் ஜோசப் மூன்றாம் யூனான், சிரிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை இரண்டாம் இக்னேஷியஸ் அஃப்ரேம் ஆகியோரும் சென்றிருந்தனர்.
ஈராக்கின் குர்திஸ் பகுதியில் கல்தேயக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோவையும் சந்தித்த இத்தலைவர்கள், கிறிஸ்தவ அகதிகளுடன் ஒன்றிணைந்து செபித்ததுடன், அவர்களுக்கு ஆறுதலும் கூறினர்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.