2014-08-21 17:17:59

ஆப்ரிக்க ஆயர்கள்: மத அடிப்படையில் மனிதர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவது பெருங்குற்றம்


ஆக.21,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் விரட்டப்படுவது மற்றும் கொலைச்செய்யப்படுவது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஆப்ரிக்காவின் தென்மண்டல ஆயர்கள்.
ஈராக்கில் மதசகிப்புத்தன்மைக்கு விண்ணப்பித்துள்ள ஆப்ரிக்க ஆயர்கள், ஈராக் கிறிஸ்தவர்களுடனான ஒருமைப்பாட்டையும், அவர்களுக்கான செப உறுதியையும் தெரிவித்துள்ளனர்.
மத அடிப்படையில் மனிதர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவது, மனித குலத்திற்கு எதிரான பெருங்குற்றம் எனவும் தங்கள் அறிக்கையில் கூறும் ஆயர்கள், கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, ஏனைய சில சிறுபான்மை குழுக்களும் ஈராக்கில் துன்பங்களை அனுபவிப்பதை அறிந்தே உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாம் மதத்தின் நல்மனம் கொண்டோர் இத்தகைய மத அடிப்படையிலான சித்ரவதைகளைத் தடுக்க தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர் ஆப்ரிக்க ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.