2014-08-20 16:57:32

ஈராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் கர்தினால் Beshara al-Rahi அவர்கள் ஒருநாள் பயணம்


ஆக.20,2014. ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பகுதி தலைநகரான எர்பிலில் மாரனைட் வழிபாட்டுமுறை கர்தினால் Beshara al-Rahi அவர்கள் இப்புதனன்று ஒருநாள் பயணம் மேற்கொண்டார்.
மேல்கத்திய கிரேக்க கத்தோலிக்க முதுபெரும்தந்தை, மூன்றாம் கிரகோரியஸ் லஹாம் அவர்களுடன் கர்தினால் Beshara al-Rahi அவர்கள், குர்திஸ்தான் பகுதியின் தலைவர், Massoud Barzani அவர்களைச் சந்தித்தார்.
நினிவே சமவெளியிலிருந்து விரட்டப்பட்டுள்ள 1,20,000 கிறிஸ்தவர்களைச் சந்திப்பது, கர்தினால் Beshara al-Rahi அவர்களின் முக்கிய நோக்கம் என்று ஆசியச் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தையின் சார்பில் ஈராக் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள கர்தினால் Fernando Filoni அவர்களுடன் கர்தினால் Beshara al-Rahi அவர்கள் தொலைப்பேசித் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.