2014-08-19 15:45:29

ஹங்கேரி நாட்டவருக்கு திருத்தந்தை நல்வாழ்த்து


ஆக.19,2014. புனித ஸ்தேவான் அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டு தேசிய தினத்தைச் சிறப்பிக்கும் ஹங்கேரி நாட்டு மக்கள் அனைவரும், உண்மை, நீதி மற்றும் கூறுபடாத்தன்மையில் தங்கள் நாட்டைத் தொடர்ந்து கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 20, இப்புதனன்று, ஹங்கேரி நாட்டினர் தங்களின் தேசிய நாளைச் சிறப்பிக்கும்வேளை, ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் János Áder மற்றும் அந்நாட்டினர் அனைவருக்கும் செபம் நிறைந்த தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த வாழ்த்துச் செய்தியை, ஹங்கேரித் தலைநகர் புடாபெஸ்ட்டிலுள்ள திருப்பீடத் தூதரகம் வழியாக அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹங்கேரி நாடு உருவாக்கப்பட்டதன் ஆயிரமாம் ஆண்டு இப்புதனன்று நிறைவடைவதையொட்டி, இத்தேசிய தினக் கொண்டாட்டங்கள் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளன.
ஆயிரமாம் ஆண்டில் ஹங்கேரியின் முதல் அரசராக முடிசூட்டப்பட்ட புனித பெரிய ஸ்தேவான் அவர்களின் விழாவான ஆகஸ்ட் 20ம் தேதியே, அந்நாடு உருவான தினமாகவும் சிறப்பிக்கப்படுகிறது.
ஹங்கேரியில் இத்தினம் புனித ஸ்தேவான் நாள் என அழைக்கப்படுகிறது. இந்நாள் அந்நாட்டுக்குத் தேசிய தினமாகும்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.