2014-08-18 15:39:07

பாலியல் அடிமைப் பெண்கள், திருத்தந்தை சந்திப்பு


ஆக.18,2014. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய இராணுவத்தால் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட பெண்கள் குழு ஒன்றை, இத்திங்கள் திருப்பலிக்கு முன்னர் முன்னர் சந்தித்து ஆசீர்வதித்து ஆறுதல் சொன்னார் திருத்தந்தை. செயோல் அமலமரி பேராலயத்துக்கு முன்னர் காத்திருந்த இந்த 7 பெண்களில் ஏறக்குறைய எல்லாருமே சக்கர நாற்காலியில் இருந்தனர். இப்பெண்களில் ஒருவர் கொடுத்த குண்டூசி ஒன்றை இத்திருப்பலியின் இறுதிவரை தனது உடுப்பில் குத்தியிருந்தார் திருத்தந்தை. இச்சந்திப்புக்கு முன்னர் AP ஊடகத்திடம் பேசிய 86 வயது Lee Yong-soo என்ற பெண், தாங்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், இன்னும் அந்த வேதனையால் துன்புறும் தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு இச்சந்திப்பு ஆறுதலாக இருக்கும் என்று கூறினார்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.