2014-08-18 15:38:56

செயோலில் பல்சமயப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை


ஆக.18,2014. செயோல் Myeong-dong பேராலயத்தில் கொரிய மறைசாட்சிகள் ஓவியத்துக்கு முன்பாக, செயோல் ஆங்லிக்கன் ஆயர், லூத்தரன் மற்றும் ப்ரெஸ்பிட்டேரியன் சபைகளின் தலைவர்கள், ஆர்த்தடாக்ஸ் பேராயர் போன்றோரைச் சந்தித்தார் திருத்தந்தை. ஆர்த்தடாக்ஸ் பேராயர் திருத்தந்தைக்குப் பரிசாகக் கொடுத்த பைசாண்டைன் சிலுவையை இத்திருப்பலியின் இறுதி ஆசீரின்போது பயன்படுத்துவதாக அவரிடம் இஸ்பானியத்தில் தெரிவித்த திருத்தந்தை, நாம் தொடர்ந்து இறைவனோடு சேர்ந்து நடந்து முன்னோக்கி நடப்போம் எனக் கூறினார். தென் கொரியாவில் அரசு மதம் என்று எதுவும் கிடையாது. அந்நாட்டில் ஏறக்குறைய பாதிப்பேர் எந்தச் சமயத்தையும் பின்பற்றாதவர்கள். 10.9 விழுக்காட்டுக் கத்தோலிக்கர் உட்பட 29.2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். கன்பூஷியம், புத்தம், இஸ்லாம் உட்பட பிற மதத்தவரும் அங்கு உள்ளனர்.

ஆதராம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.