2014-08-13 16:16:00

நாத்சி இராணுவம் மேற்கொண்ட படுகொலையின் 70ம் ஆண்டு நினைவையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி


ஆக.13,2014. உடன் பிறந்தோர் உணர்வுடன் மக்களும் நாடுகளும் வாழ்வதற்குரிய முயற்சிகளில் நம்மை முழுவதும் அர்ப்பணிக்க, அமைதியின் இளவரசரின் அருளை இறைஞ்சுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
1944ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, இத்தாலியின் Tuscany பகுதியில் அமைந்துள்ள Camaiore என்ற ஊரில், இரு அருள் பணியாளர்கள் உட்பட, 560 பேரை நாத்சி இராணுவம் கொன்றது. அந்த படுகொலையின் 70ம் ஆண்டு நினைவையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Pisa உயர் மறைமாவட்டப் பேராயர் Giovanni Benotto அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இப்படுகொலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அன்னை மரியின் ஆறுதல் கிடைப்பதாக என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டத்தில், Stazzemaவின் Sant'Anna என்ற கிராமத்தில் நாத்சி கொடுமைகளை எதிர்த்து எழுந்த போராட்டத்தை அடக்க, 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி நாத்சி படைகள் அக்கிராமத்தில், 130 குழந்தைகள் உட்பட, 560 பேரைக் கொன்று அவர்கள் உடல்களை எரித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.