2014-08-09 14:40:58

எபோலா நோய் குறித்து விழிப்புடன் செயல்படுமாறு கானா அரசுக்கு ஆயர்கள் வேண்டுகோள்


ஆக.09,2014. மேற்கு ஆப்ரிக்காவில் கடும் ஆபத்தை முன்வைத்துள்ள எபோலா நோய் குறித்து உலக நலவாழ்வு நிறுவனம் அவசர நிலையை அறிவித்துள்ளவேளை, கானா நாடு இந்நோய் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
கானா நாட்டில் கடல் வழியாக நுழையும் மக்கள்மீது மிகுந்த விழிப்புடன் இருந்து இந்நோய் குறித்த பரிசோதனைகளை நடத்துமாறும் ஆயர்கள் அரசைக் கேட்டுள்ளனர்.
கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயால் ஏறக்குறைய ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
இதற்கிடையே, புதுடில்லி வந்துள்ள பயணி ஒருவர் எபோலா நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக நலவாழ்வு நிறுவனம் இந்திய மத்திய நலவாழ்வுத் துறையை எச்சரித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.