2014-08-05 15:51:01

புற்றுநோயைத் தடுக்கும் கருப்பு மிளகு


ஆக.05,2014. உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல், புற்றுநோய்க் கட்டிகள் வராமல் தடுப்பதிலும், கருப்பு மிளகு பெரும் பங்கு வகிப்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து கூறிய அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சன்டியாகோ மருத்துவப் பள்ளியை சேர்ந்த பேராசிரியர் அயால்ராஜ், கருப்பு மிளகில், வீரியமிக்க, 'Capsaicin ' உள்ளது. இது குடல் புற்றுநோயைத் தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
'டி.ஆர்.பி.,' என்றழைக்கப்படும் பெருங்குடல் சுவர்களில் காணப்படும் செல்களில், மிளகிலுள்ள கெப்செசின் செயல்பட்டு புற்றுநோய்க் கட்டிகளை எதிர்க்கும் காரணிகளை உருவாக்குகிறது. எலிகளிடையே செய்யப்பட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. எதிர்காலத்தில், டி.ஆர். பி., மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் அயால்ராஜ் கூறியுள்ளார்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.