2014-08-05 15:51:07

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த கடலூர் மாவட்ட 17 மாற்றுத் திறனாளிகள்


ஆக.05,2014. கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் 17 பேர், தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான இசைவுக் கடிதத்தை கடலூர் ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தி இந்து நாளிதழிடம் பேசிய கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் குமார் அவர்கள், உடல்தான் ஊனமே தவிர எங்களது உள்உறுப்புகள் நன்றாக உள்ளன. உடல் ஊனமுற்றோர் என்ற அடையாளத்துடன் வாழும் நாங்கள், எங்களுக்குப் பிறகு சராசரி மனிதர் உடலில் எங்கள் உறுப்புகள் வாழ வேண்டும்” எனக் கூறினார்.
‘விபத்தினாலும், நோயினாலும் உடல் உறுப்புக்களை இழக்கும் பலர் உயிரிழக்கும் சம்பவம் எங்களைப் பாதிக்க வைத்துள்ளது என்றும், இறந்த பிறகு இந்த உடல் மண்ணுக்கு செல்கிறது. அதனால் யாருக்கும் பயனில்லை. எங்களால் காசு பணம் கொடுக்க இயலாது. எங்கள் உறுப்புக்களைத் தானம் செய்கிறோம் என்றும் கூறினார் சந்தோஷ் குமார்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.