2014-08-04 16:31:33

வியட்நாமில் மத உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. அதிகாரி கவலை


ஆக.04,2014. வியட்நாம் நாட்டில் மதச்சுதந்திரம் மிகப்பெரிய அளவில் மீறப்பட்டு வருவதாக அப்பகுதியில் பயணம் மேற்கொண்ட ஐ.நா. அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வியட்நாம் அரசு அதிகாரிகளையும் மதத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்திய, மத விடுதலை தொடர்பான ஐ.நா. சிறப்பு அதிகாரி Heiner Bielefeldt, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக மத நம்பிக்கையாளர்களுக்கு எதிரான அரசின் எதிர்மறைப் போக்கினை வியட்நாமில் உணரமுடிகிறது என்றார்.
இதற்கிடையே, ஐ.நா. சிறப்பு அதிகாரியை சந்திக்க விரும்பிய வியட்நாம் மத அமைப்புகள் சில, அரசால் அச்சுறுத்தப்பட்டதாகவும், காவல்துறை மூலம் தடுக்கப்பட்டதாகவும் CSW என்ற உலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : FIDES








All the contents on this site are copyrighted ©.