2014-08-04 16:31:24

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் தலித் மக்களுக்கு நீதி கேட்கும் கறுப்பு தினம்


ஆக.04,2014. மதத்தின் அடிப்படையில் தலித் மக்கள் இந்திய அரசால் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இம்மாதம் 10ம் தேதியை கறுப்புத்தினமாக அனுசரிக்கத் திட்டமிட்டுள்ளது இந்தியத் திருஅவை.
இந்துமதத்தைப் பின்பற்றும் தலித் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களில் வாழும் அதே இன மக்களுக்கு வழங்கப்படாமலிருப்பது சமூக அநீதியாகும் எனக் கூறும் இந்தியத் திருஅவை, இந்த அநீதியை எதிர்த்தே கறுப்பு தினம் அனுசரிக்கப்படுவதாக உரைத்தது.
இந்து மதத்தில் உள்ள தலித் மக்கள் தவிர, ஏனையோருக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குரிய சலுகைகள் வழங்கப்படமாட்டாது என அப்போதையக் குடியரசுத் தலைவர் 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கையெழுத்திட்டதை முன்னிட்டு, ஆகஸ்ட் 10ம் தேதியை கறுப்பு தினமாக கடைப்பிடிக்கிறது இந்தியத் திருஅவை.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.