2014-08-01 15:54:03

மெக்சிகோ ஆயர்கள் : குடியேற்றதாரச் சிறார் குடும்பங்களுடன் இணைக்கப்பட வேண்டும்


ஆக.01,2014. மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து தரமான வாழ்வுதேடி அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குள் தனியாகச் செல்லும் சிறார் தங்கள் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கப்படுவதற்கு உதவும் சட்ட நிறுவனம் ஒன்று உருவாக்கப்படுமாறு மெக்சிகோ ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மெக்சிகோவில் நான்கு நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியா மாநில ஆளுனர் Edmund G. Brown அவர்களச் சந்தித்து, குடியேற்றதாரச் சிறார் தங்கள் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர் மெக்சிகோ ஆயர்கள்.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குள் தனியாகச் செல்லும் சிறார் எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டு வருவதை முன்னிட்டு இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.
கடந்த அக்டோபரிலிருந்து 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் சரியான ஆவணங்களின்றி மத்திய அமெரிக்காவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குள் சென்றனர் என்பது தவறான செய்தி எனக் கூறிய ஆயர்கள், மனித வணிகர்களால் இத்தகைய தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன எனவும் கூறினர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.