2014-08-01 15:53:48

காசாவில் போர்நிறுத்தம் முடிந்தது, தாக்குதல்கள் ஆரம்பம்


ஆக.01,2014. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வேண்டுகோளின்பேரில் காசாவில் போர்நிறுத்தத்தை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவம், அதனை முடித்துக்கொண்டு தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
அதேநேரம், பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஐ.நா. வலியுறுத்தலைத் தொடர்ந்து 72 மணிநேர போர் நிறுத்தத்துக்கு, ஹமாஸ் அமைப்பும், இஸ்ரேல் இராணுவமும் ஒப்புதல் அளித்திருந்தன. ஆனால், போர் நிறுத்தத்திற்கு முன்னர் இஸ்ரேல் நடத்திய சரமாரிக் குண்டுமழைத் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லையில் உள்ள சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.