2014-08-01 15:53:56

ஆகஸ்ட் 25, கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறைகளில் பலியானவர்கள் நினைவு தினம்


ஆக.01,2014. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளில் இறந்தவர்களை நினைவுகூரும் தினம் இம்மாதம் 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் கந்தமாலில் இந்துமதத் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் விதமாக, இம்மாதம் 25ம் தேதியன்று பல்வேறு செப வழிபாடுகளும் பொது நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இப்படுகொலை நிகழ்வில் நீதி இன்னும் கிடைக்கவில்லை என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்திலும் அன்றைய நாளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள், கலைஞர்கள், அறிவாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரும் இணைந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கழகம் இந்த நினைவு தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவருகிறது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.