2014-07-31 16:52:06

நேபாளத்தில் வெள்ள நிவாரணப் பணியில் கிறிஸ்தவ அமைப்புக்களே முழுமையாக ஈடுபட்டுள்ளன


ஜூலை,31,2014. நேபாள நாட்டைச் சூழ்ந்துள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காக்கும் பணியில் கிறிஸ்தவ அமைப்புக்களே முழுமையாக ஈடுபட்டுள்ளன என்று ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடந்த சில நாட்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் குடியிருப்புக்களை மூழ்கச் செய்துள்ள அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் பணியில் கிறிஸ்தவ அமைப்புக்களும், ஒரு சில அரசுசாரா அமைப்புக்களும் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் நேபாளத்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை அரசு நன்கு அறிந்திருந்தாலும், இதுவரை சரியான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குறை கூறுகின்றனர்.
தங்கள் இல்லங்களையும், உடைமைகளையும் இழந்து தவிப்பவர்களுக்கு, செபங்களையும், திருப்பலியையும் அர்ப்பணிக்கும் கிறிஸ்தவர்களைக் காணும்போது, பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு மனநிம்மதி பெறுகின்றனர் என்று Kanchanpur மாவட்ட அரசு அதிகாரி கிருஷ்ண சந்திரா அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.