2014-07-29 15:56:41

பாகிஸ்தானில் பயங்கரவாதமும் மதசகிப்பற்றத் தன்மைகளும் கொள்ளை நோயாக உள்ளன


ஜூலை,29,2014. பயங்கரவாதமும் மதசகிப்பற்றத் தன்மைகளுமே பாகிஸ்தானைப் பிடித்துள்ள கொள்ளை நோய்கள் என்கிறார் அந்நாட்டு லாகூர் குருத்துவக் கல்லூரி அதிபர் அருள்திரு Inayat Bernard.
பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு கிறிஸ்தவர்களும் தங்கள் ஆதரவை வழங்குவதாக உரைத்த அருள்திரு Bernard, இஸ்லாம் மதத்தைப்போல் தாங்களும் அமைதியையே விரும்புவதாகக் கூறினார்.
அமைதியையே விரும்பும் மதம் இஸ்லாம் என்பதில் எவ்வித கருத்துமாற்றமும் இல்லையெனினும், பாகிஸ்தான் சமூகத்தில் இஸ்லாமியரல்லாதோருக்கு எதிரான தலிபான் மனநிலை இருப்பதைச் சுட்டிக் காட்டினார் அவர்.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமின் ஒரு சாராருக்கும் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது, சமூகத்தில் பாலங்களைக் கட்டி, அமைதியை ஊக்குவிக்க உதவியாக இருக்கிறது என மேலும் கூறினார் அருள்திரு Bernard.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.