2014-07-29 15:56:02

பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்களுடன் ரம்ஜான் விழா


ஜூலை,29,2014. தன்னலம் வளர்ந்துவரும் ஓர் உலகில், ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக நாம் நடப்பதற்கு உதவும் நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று பங்களாதேஷ் ஆயர் ஒருவர் கூறினார்.
பங்களாதேஷ் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய பணிக்குழுத் தலைவர் ஆயர் Bejoy Cruze அவர்கள் ரம்ஜான் பண்டிகைக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் முஸ்லிம்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஆயர் Cruze, ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள், நோன்பிலும், செபத்திலும், பிறரன்புச் செயல்களிலும், கடவுளோடு நெருங்கிய உறவை வளர்ப்பதிலும் ஈடுபடுகிறார்கள் என்றும் தனது செய்தியில் பாராட்டியுள்ளார்.
சகோதரத்துவம், அன்பு ஆகிய இரு பண்புகளில் கிறிஸ்தவமும், இஸ்லாமும் ஒருமித்த கூறுகளைக் கொண்டுள்ளன என்றும், இவ்விரு மதங்களும் ஒரே கடவுளிலும், மனிதர் கடவுளின் சிறந்த படைப்பு என்பதிலும் நம்பிக்கை வைக்கின்றன என்றும் ஆயர் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.