2014-07-28 16:29:51

காஸா கிறிஸ்தவக் கோவிலில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள்


ஜூலை,28,2014. காஸாவில் அமைதி நிலவ வேண்டி அங்குள்ள முஸ்லிம்கள் காசா புனித போர்பைரியஸ் கிறிஸ்தவக் கோவிலில் தொழுகை நடத்தி வருகின்றனர்.
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால் காஸா நகரில் உள்ள கிறிஸ்தவக் கோவிலில் ஏராளமான பாலஸ்தீனிய இஸ்லாமியர்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவர்கள் கோவிலிலேயே தொழுகை நடத்த கிறிஸ்தவத் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
கிறிஸ்தவக் கோவிலில் தொழுகை நடத்த, தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கிறிஸ்தவர்கள் குறித்த தங்களின் எண்ணத்தை மாற்றியுள்ளதாகவும், அவர்களைச் சொந்தச் சகோதரர்கள் போல் எண்ணுவதாகவும், இக்கோவிலில் அடைக்கலம் தேடியுள்ள மெஹ்மூத் காலப் என்பவர் கூறினார்.
ரமலான் நோன்பு காலத்தில் தங்கள்முன் சாப்பிடாமல், கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய நோன்பிற்கு மரியாதை அளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
காசாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் புனித போர்பைரியஸ் கோவிலில் ஏறத்தாழ 1000 முஸ்லிம்கள் அடைக்கலம் தேடியுள்ளனர். காசா பகுதியின் 18 இலட்சம் இஸ்லாமியரிடையே 1400 கிறிஸ்தவர்களே வாழ்கின்றனர்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.