2014-07-25 15:46:54

திருத்தந்தையின் முதல் ஆசியத் திருப்பயணத்தை நினைவுகூரும் நாணயங்கள்


ஜூலை,25,2014. வருகிற ஆகஸ்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் முதல் ஆசியத் திருப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக, நினைவு நாணயங்களை வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, தென் கொரிய மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஆகஸ்டில் தென் கொரியாவுக்குத் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தை முன்னிட்டு தொன்னூறாயிரம் வெள்ளி மற்றும் பித்தளை நாணயங்களை வெளியிடவிருப்பதாகத் அறிவித்த கொரிய வங்கி, இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கமாகிய ஒப்புரவு மற்றும் அமைதிச் செய்தியை பரப்புவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் கூறியது.
இந்த நாணயங்களில், கத்தோலிக்க அமைதி அடையாளமும், கொரிய மரபு அடையாளங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் எனவும் கொரிய வங்கி அறிவித்துள்ளது.
வருகிற ஆகஸ்டு 14 முதல் 18 வரை தென் கொரியாவில் மேற்கொள்ளும் திருப்பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 124 கொரிய மறைசாட்சிகளை அருளாளர் நிலைக்கு உயர்த்துவது உட்பட நான்கு திருப்பலிகள் நிறைவேற்றுவார் மற்றும் கத்தோலிக்க ஆசிய இளையோர் மாநாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.